திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பட்டாசுகளை அரசின் விதிமுறைகளுக்கு
உட்பட்டு திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்
பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது
பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்
சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்
காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்
வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது
பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்
முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்
மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக்கூடாது
கூரை வீடுகள் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது
சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது
பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது.
மேற்கண்டவாறு பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி கொண்டாட
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா