விருதுநகர்: விருதுநகர் சாலையில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, வேனில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கருந்திரிகள் மற்றும் பட்டாசு தயாரிக்கப்பயன்படும் மூலப் பொருளான வெடிஉப்பு 50 கிலோ இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக பட்டாசு மூலப்பொருட்கள் கொண்டு சென்ற ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்m58, விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் 41 இருவர் மீதும், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.