கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளி பகுதியில் நவீன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசுகடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் விற்பனைக்காக வாங்கி வந்த பட்டாசுகளை லோடு இறக்கி கொண்டிருக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் குடோனில் பட்டாசு லோடு இறக்க சென்ற 15 நபர்கள் மேல் உள்ளே வேலை செய்துள்ள நிலையில், தீ விபத்து ஏற்பட்டு 4 மணி நேரம்மாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு காவல் துறையினர் இணைந்து உள்ளே சிக்கி கொண்ட நபர்களை மீட்டனர். அதில் 14 நபர்கள் பரிதாபமா மரணம் அடைந்தார்கள். இந்த 14 நபர்களை பொருத்தவரை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 8 பேரும். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 3 பேரும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் சேர்ந்த 2 பேரும். ஓசூர் பகுதியை சேர்ந்த 1 பேர்கள் பட்டாசு கடையில் வேலைக்கு சென்றவர்கள் என்று தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் பட்டாசு கடைக்குள் தீ விபத்தில் இறந்த நிலையில் இதில் 12 பேரை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு பேர் அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த தீ விபத்து குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு ஏற்ற மரணமடைந்த நபர்களுக்கு நிவாரண தொகையாக தலா 3 லட்சமும். படுகாயம் அடைந்த நபர்களுக்கு 1 லட்சமும் .சிறிய சிரிய காயம் அடைந்தவருக்கு 50.000 ஆயிரம் நிவாரண தொகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தீ விபத்து அப்பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இறந்தவர்கள் சடலத்தை காண கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சராயு மற்றும் ஓசூர் துணை மாவட்ட ஆட்சியர் திரு.மதி.சரண்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் அவர்கள், மற்றும் ஓசூர் சட்ட மற்ற உறுப்பினர் திரு.Y.பிராகஷ் நேரில் சென்று கண்ணிர் அஞ்சலி செலுத்தினர்கள். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்