வேலூர்: வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கில் அருகே சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம் (நரிக்குறவர்கள்) சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த லிங்கேஷ்வரன், கிஷோர், பாலாஜி ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 1500 பணம், 1 செல்போனை வழிபறி செய்துக்கொண்டு பட்டா கத்தியுடன் கலாட்டா செய்துள்ளனர்.
இதனை அவ்வழியாக சென்ற எஸ்.பி திரு.செல்வகுமார் பார்த்து உடனே அவர்களை விரட்டி பிடித்து அவர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்தி ஒரு செல்போன் ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வடக்கு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். பாலாஜி தப்பியோடிய நிலையில் லிங்கேஷ்வரன், கிஷோரை சிறையில் அடைத்தனர்.
இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மாநகரின் முக்கிய சாலையில் சுற்றிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில தினங்களாகவே வேலூர் மாநகரில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. நேற்றும் ஒரு இளைஞர் முன்விரோதமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.