விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் தனியார் ஒருவரிடம் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். சிவகாசி – விஸ்வநத்தம் சாலையில் உள்ள மணிநகர் பகுதியில் உள்ள வேன் நிறுத்தும் இடத்தில் வேனை நிறுத்தி வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தராஜிற்கும், அங்கிருந்த சிலருக்கும் வாகனங்களை நிறுத்துவதில் வாய்ச்சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகல் மணிநகர் பகுதியில் வேனை நிறுத்திவிட்டு, ஆனந்தராஜ் மதியஉணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுஆனந்தராஜை பின் தொடர்ந்து வந்த, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஆனந்தராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனலிக்காமல் ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் கேள்விப்பட்ட, காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாபுபிரசாந்த் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஆனந்தராஜிற்கு எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லையென்றும், மிகவும் அமைதியானவர் என்றும், எல்லோரிடமும் மரியாதையாக பழக கூடியவர் என்பது தெரிய வந்தது.
டி.எஸ்.பி திரு.பாபுபிரசாந்த் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன