இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள்
படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் அவர்தம்
சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) திரு.ராஜசேகரன் அவர்கள் தலைமையேற்று முன்னாள் படைவீரர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று பேசுகையில், முன்னாள் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர்களின் அவர்தம் சார்ந்தோர்களுக்கான கோரிக்கைகள் குறித்து சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் பெறக்கூடிய மனுக்களுக்கு தொடர்புடைய துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து விரைந்து அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கிட வேண்டும். கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 14
மனுக்களில் 12 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 2 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.
தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ள மனுக்களில் பட்டா மாறுதல், பட்டா பெயர்
மாற்றம், வீட்டுமனை பட்டா, சாலை வசதி போன்ற கோரிக்கைகள் குறித்த மனுக்கள் அதிகளவில்வரப்பெற்றது. வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மனுதாரர் முன்னிலையில் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) திரு.ராஜசேகரன் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் 2 நபர்களுக்கு கண்கண்ணாடி வாங்குவதற்கான மானியம் தல ரூ.4000-த்திற்கான காசோலையினை மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) திரு.ராஜசேகரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி ஆணையர் திரு.மதியழகன் அவர்கள், கண்காணிப்பு அலுவலர் திரு.சங்கர சுப்பிரமணியன் அவர்கள், முன்னாள் படை வீரர் நலவாரிய செயலாளர் திரு.முருகன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி