மதுரை : ஜூலை 21 திருநெல்வேலி பாலமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சித்திரவேல். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு காலனியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் வேலை நடைபெறும் இடத்திலேயே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கட்டிட வேலையின் போது படிக்கட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவருடைய மனைவி ராஜேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிட தொழிலாளி சித்திரவேலின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி