காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 கொலைகள், 9 கொலை முயற்சிகள் 8 வழிப்பறி , 6 அச்சுறுத்தி மிரட்டுதல், 4 மணல் வழக்குகள், உட்பட மொத்தம் 48 வழக்குகளில் சம்பந்தப்பட்டு இரு முறை தடுப்பு காவல் (Goondas) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 43 வயது கொடுங்குற்றவாளி குணா (எ) குணசேகரன் (எ) படப்பை குணா என்பவர் மேற்படி வழக்குகளில் நீதிமன்ற பிடி யானை நிறைவேற்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பெரும்புதூர், அவர்களின் அறிவுரையின்படியும், காவல் ஆய்வாளர் சுங்குவார்சத்திரம் அவர்களுடன் இணைந்து காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி நேற்று (25.01.22) சுங்குவார்சத்திரம் காவல்நிலைய வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.