தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம் அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடினர். இதில் பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவில்பட்டி டி.எஸ்.பி திரு .வெங்கடேஷ் தலைமையிலான காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அதே ஊரை சேர்ந்த பா.ஜ., ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (33), வசந்த் (18), ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற சொன்ன தீர்மானத்தை பொன்ராஜ் நிறைவேற்றவில்லை எனவும், இதனை கேட்க சென்றபோது பொன்ராஜ் தங்களை அவதூறாக பேசியதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.