உணவு உற்பத்தியிலும், அந்த உணவை வீணாக்குவதிலும், உணவே கிடைக்காமல் பலர் பசியால் இறப்பதும் இந்தியாவில்தான் அதிகம். சாலையோரங்களில், ஆதரவின்றி வசிப்போர், இன்றும் மூன்று வேளை அல்ல ஒரு வேளை கூட உணவு கிடைக்காமல் அல்லல்படுவதை, பார்க்கிறோம். அநேகம் பேர், அனுதாபத்தோடு நின்றுவிடுகின்றனர்.
நியூஸ் மீடியா அசோசியோஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை உணவின்றி இருந்த சாலையோர ஏழை எளிய மக்களின் பசி போக்க ருசியான உணவு வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை தொடங்கி இருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.சார்லஸ் கூறுகையில், பல ஆண்டுகளாக நல திட்ட உதவிகள் செயல்படுத்தி வருகிறாம். பிறந்தோம், இறந்தோம் என்றில்லாமல் நாலு பேருக்கு உணவு கொடுக்கிறோம் என்ற மனநிறைவு பெறுகிறோம். ஏழை,எளிய மக்கள் பசியால் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ளுவோம். பசியில்லாத தேசத்தை உருவாக்க, இன்னும் அதிகமானோர் இணைந்தால் நோக்கம் சீக்கிரமாக நிறைவேறும்.
போரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில், உணவின்றி இருந்த, ஆதரவு அற்றவர்களுக்கு, கிருமி நாசினி உபயோகப்படுத்தி கைகளைக் கழுவி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் அளித்து, சாலைப்பகுதிகளில் வசிக்கும் சாலையோர மக்கள் 750 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
பல நலத்திட்டங்களை தொய்வின்றி நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் முதன்மை ஆசிரியர் அ.சார்லஸ் அவர்கள் பல ஆண்டு காலமாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார். மேலும் சங்கத்தில், உள்ள உறுப்பினர்களையும் மற்றும் தலைவர்களையும் சமூக சேவை செய்ய ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் வழிகாட்டுதலின்படி, சென்னை மாவட்ட தலைவர் திரு.முகமது மூசா அவர்கள் செய்து வருகிறார்.