கோவை : கோவை மாநகர் ரத்தினபுரி காவல் நிலைய சரகம் எல்லையான கேகே நகர் ஜாகிர் உசேன் வீதியில் குடியிருக்கும் கூலித்தொழிலாளி வயது 33 என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது ஆண் குழந்தை 9 மாத பெண் குழந்தை ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். இவர் அன்றாட உணவிற்கு எதுவும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தகவல் தெரிந்து, கோவை மாநகர் மத்திய சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் திரு.கார்த்திகேயன் அவர்களும், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் திரு.தெய்வசிகாமணி அவர்கள் மேற்படி உணவிற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த என்பவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று, ஒரு லிட்டர் பால், 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மாவு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு, மற்றும் 5 கிலோ காய்கறிகள் அவருக்கு வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்