அரியலூர் : கொரோனா நோய்த்தொற்று பரவுதல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் மற்றும் ஆதரவற்றோர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு இன்றி தவித்து வருவதை அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளிகள் மற்றும் ஆதரவற்றவர்கள் , வயது முதிர்ந்தவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு காவல்துறையின் ரோந்து வாகனம் மூலம் தினமும் காலை ,மாலை இருவேளையும் உணவு பொட்டலங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரின் தேவையில் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதை உணர்ந்து, தினமும் உணவு தயார் செய்து கொடுத்து வரும் காவல்துறையினரை மக்கள் வயிறார உண்டு விட்டு மனமார வாழ்த்தி வருகின்றனர்.