மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் கீழமாத்தூர் பகுதி பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை தியாக பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முஸ்லிம்கள், குர்பானி ஈத் முபாரக் பெருநாள் வழங்கி மும்மதத்தினரோடு ஈத் முபாரக் பெருநாள் இனிய வாழ்த்துக்களை கூறி விருந்தோம்பல் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்தை காட்டும் வகையில் கொண்டாடினர். சோழவந்தான் நைனார் ஜும்மா தொழுகை பள்ளிவாசலில் ஜமாத்தினர் முன்னிலையில் ஹஜரத் முகமது யாசின் பக்ரீத் பெருநாள் தியாகத்தின் மகிமை குறித்து சிறப்பு தொழுகை நடத்தினர். இத்தொழுகையில் ஏராளமான ஜமாத்தினர் இளைஞர்கள் பங்கேற்று பெருநாள் ,வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடினர். கீழமாத்தூர் பள்ளிவாசலில் ஜமாத்தினர் குர்ஆன் ஓதிக் கொண்டு ஊர்வலமாக ஈத்ஷா பள்ளிவாசல் வந்தனர் . அங்கு மௌலானா ஹஜ்ரத் சலீம் ராஜா இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனின் மகத்துவம் வாழ்க்கை தியாகத்தின் புனித தத்துவம் பற்றி சிறப்புரை செய்த பிறகு பக்ரீத் பண்டிகை பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்று ஈர்த்திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். குர்பானி வழங்கி மும்மதத்தினருடனும் கொண்டாடினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி