திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (27.08.2024) கானூர் சோதனைச்சாவடி வழியாக வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் பக்தர்கள் எடுத்து செல்ல கூடிய பைகள் (Bag) மற்றும் அவர்களின் ஆடைகளில் இரவில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் (Reflective Sticker) ஒட்டியும், தூக்கம் மற்றும் அதிக களைப்புடன் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, ஓய்வு எடுத்துவிட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.மேலும், கானூர் சோதனைச்சாவடி வழியாக வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எடுத்து செல்லும் பைகளில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்ட (Reflective Sticker) சோதனைச்சாவடி பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.