தஞ்சாவூர்: சமயபுரம் மற்றும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ரோந்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், பக்தர்களின் ஆடைகளில் இரவில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியும் மற்றும் இரவில் தங்கி காலையில் பயணத்தை மேற்கொள்வதற்கு அறிவுரைகள் வழங்கியும் தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.