நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ் ஆர் எம் சி(SRMC) போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பழனி அவர்கள் கலந்துகொண்டு சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கினார்கள்.
எஸ் ஆர் எம் சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பழனி அவர்கள் அப்பகுதியில் சீரிய முறையில் மக்கள் சேவையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை அன்புடன் அழைத்து, அவர்களுக்கு சாலை விபத்து குறித்து தெளிவாக விவரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ் ஆர் எம் சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பழனி அவர்கள் இன்முகத்துடன் உணவு வழங்கி மகிழ்ந்தார். கடுமையான காவல் பணிகளுக்கு இடையில், தன் நேரத்தை ஒதுக்கி, மக்கள் சேவை செய்ய வருகை தந்த காவல் ஆய்வாளர் திரு.பழனி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
போரூர் ரவுண்டானா சிக்னல் அருகில் (20.03. 2022) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணி அளவில், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம் வழங்கி, வெஜிடபிள் பிரியாணி, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இதில் சுமார் 650 பேருக்கு உணவு வழங்கிப்பட்டது.
சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கும், முதியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, மாநில வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர்.