திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பண்டியில் வினா ஸ்ரீ யோகா மையம் நடத்திய யோகாவில் மாபெரும் நோவா உலக சாதனையை ஒன்பது வயது மாணவன் தர்ஷன் 254.5 மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களுக்குள் பரிபூர்ணா ஆசனத்தில் கையால் நடந்து யோகாவில் நோவா உலக சாதனை செய்தார். கும்மிடிப்பூண்டி செயின்ட் மேரிஸ் துவக்க பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் தர்ஷன். இளம் வயது முதல் யோகாவில் விருப்பம் கொண்டு கடந்த மூன்று வருட காலமாக பயிற்சி பெற்று வந்தார். தொடர்ந்து நேற்று மாலை 5 மணி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டள்ள 200 மீட்டர் விரிப்பின் மீது பரிபூர்ணா ஆசனத்தில் கையால் நடந்து இந்த சாதனை செய்தார். வினா ஸ்ரீ யோகா மையத்தின் நிறுவனர் காளீஸ்வரன் பயிற்சி அளித்ததன் பேரில் யோகா சாதனையை முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். விஜயகுமார் துவக்கி வைத்தார். முன்னதாக பறையாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரையுடன் கலை கட்டிய சாதனை நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி இரயில் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் திரும்பி பார்க்கும் வண்ணம் புதிதாக அமைக்கப்பட்டிருந்த இரயில்வே மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாணவன் 254.5 மீட்டரை கடக்கும்போது ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
பின்னர் இரயில் நிலையத்திலிருந்து சென் மேரிஸ் பள்ளி வரை மாலை அணிவித்து சிறுவனை ஊர்வலமாக கூட்டி வந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாணவனுக்கு நோவா உலக சாதனை புத்தகம் அதனுடைய நிர்வாக ஆசிரியர் ராஜ்குமார், தமிழக நோவா உலக சாதனை நடுவர் பிரபாகரன் ஆகியோர் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் டி.கே. மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் மு. க.சேகர்,ஓடை ராஜேந்திரன், சுகுமார், இமயம் மனோஜ், சீனிவாசன், எல்லப்பன், கவியரசு, சாந்தி, சேகர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு