திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சி நாயக்கன் பட்டி கிராம பகுதிகளில் உள்ள சோலைராஜா காலனி பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தாடிகொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் பவுல் ராஜ் அவர்கள் கொரணா மற்றும் 144 ஊரடங்கு பற்றிய விழிப்புணர்வுக்காக, இன்று நோயின் தொற்று மற்றும் கட்டுபடுத்தும் வழி போன்றவற்றை விளக்கினார். மேலும் பொது மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்பதையும் விளக்கி கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் பவுல் ராஜ் அவர்கள் திண்டுக்கல் நகர் தாலுகா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று கொரணா மற்றும் 144 ஊரடங்கு விழிப்புணர்வை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் தலைகவசம் மற்றும் முககவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வடன் கூடிய ஆலோசனைகளை வழங்கினார் .மேலும் உரிய ஆவணங்கள் மற்றும் விதிமீற வெளியே வரும் வாகன ஓட்டிகளின் மீது வழக்கு மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா