இறைவனின் ஆசியால், நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் இணைந்து நீரிழவு நோயினால் அவதிப்பட்டு வந்த நான்கு நபர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.
நீரிழவு நோயினால் பாதிக்கப்பட்டு வலது காலை அறுவை சிகிச்சை மூலமாக எடுக்கப்பட்டு இருக்கும் வேப்பம்பட்டை சேர்ந்த அப்துர் சலாம் என்பவருக்கு மருத்துவ செலவிற்கு பணம் உதவி வழங்கப்பட்டது.

கே.கே. நகரில் வசிக்க கூடிய மோகனா என்பவருக்கு இடது கால் முறிவு ஏற்ப்பட்டு சிகிச்சையில் இருக்கும் அவருக்கு மருத்துவ செலவிற்கு பண உதவி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாடும் காலில் உள்ள மூட்டு நகர்ந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு மருத்துவ செலவிற்கும் பண உதவி உதவி வழங்கப்பட்டது.
சென்னை கூடுவாஞ்சேரியில் இருதய அறுவை சிகிச்சை நடைப்பெற்று இருக்கும் சாதிக் பாட்சா என்பவருக்கு மருத்துவ செலவிற்கு பண உதவி வழங்கப்பட்டது.
இந்த நல்ல காரியத்திற்கு பல ஆயிரங்கள் பணம் அளிக்கபட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி , நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர். திரு.முகமது மூசா இதனை தன் வாழ்வின் ஒரு அங்கமாகவும், மக்கள் சேவையை தன் மூச்சாகவும், அதனை தொடர்ச்சியாகவும் செய்து வருவது பாராட்டுவதற்குரியது.
















