கோவை : கோவை மாநகர் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம், சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து, CORONA வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து குவாரண்டின் காக பிரித்து 14 நாட்கள் பார்வையில் வைப்பதற்காக, உப்பிலிபாளையம் Perks மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 24 நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவை மாநகர உதவி ஆணையர் சட்டம் ஒழுங்கு கிழக்கு திரு. சோமசுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், E1 சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு முனீஸ்வரன், உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் மற்றும் காவலர்கள் மற்றும் ஆத்மா அறக்கட்டளை திரு கந்தவேலன் ஆகியோர்களால் தற்போது செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு இருக்கும் காலங்களில் தேவைப்பட்ட உதவிகளை கோவை மாநகர காவல்துறை சார்பில் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம் மூலம் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்