திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் புனித மரியாள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர் மனோஜ் என்பவர் ஜி.பி.எஸ் வைரஸ் என்ற புதியவகை நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது தாயார் வைத்த கோரிக்கையின் பேரில் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் நிறுவனத்தின் மூலம் மருத்துவ உதவியாக ரூபாய் 2 லட்சத்து 75 ஆயிரம் நேரடி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டது. இதனை அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.பாலாஜி மாணவர் மனோஜின் தாயாரிடம் அப்பள்ளியின் தாளாளர் முன்னிலையில் வழங்கினார். மருத்துவ உதவியினை பெற்றுக்கொண்ட மாணவரின் தாயார் நிறுவனத்தாருக்கு நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு