திருநெல்வேலி : திருநெல்வேலி, பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே, வல்லநாட்டை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் 20-07-2020-ம் தேதியன்று, சாலையில் சென்று கொண்டிருந்த போது, கேட்பாரற்று கிடந்த மணிபர்ஸ் ஒன்றை கண்டுள்ளார். அருகில் விசாரித்து பார்த்தும் யாருடையது என தெரியாததால் அதனை நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதில் ரூ 7000 மற்றும் வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளும் இருந்தது.
கிடைத்த விபரங்களை அடிப்படியாக கொண்டு உரிய முறையில் விசாரித்து, அதன் உரிமையாளரான வி.எம். சத்திரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவரை கண்டறிந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெருக்கடி மிகுந்த கொரோனா தொற்றுக் காலத்திலும் நெல்லையின் நேர்மை குணத்தை பிரதிபலித்த வல்லநாட்டை சேர்ந்த திரு. பூல்பாண்டியன் அவர்களை நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்கள் பாராட்டினார்கள்.
