சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா என்பவர் நேற்று இரவு 08:30 மணி அளவில் புதுக்கோட்டை சாலை வழியாக மூலக்கடை வீதியில் வந்து வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில் மூலக்கடை பகுதியில் வரும்போது டூவீலரில் வைத்திருந்த பணம் தவறி விழுந்தது தெரியாது வீட்டிற்கு சென்றுவிட்டார் வீட்டில் சென்று பார்த்த பொழுது டூவீலரில் பணமில்லாது அதிர்ச்சி அடைந்த சண்முகராஜா திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் பணம் தொலைந்தது குறித்து புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர் இந்நிலையில் இன்று காலை 09:30 மணிக்கு திருப்புத்தூர் மூலக்கடை வீதியில் புளியம்பழம் மொத்த வியாபாரம் செய்யும் பீர்முகமது என்பவர் திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவு மூல கடைவீதியில் சாலையில் ரூபாய் 70,000 பணம் கீழே விழுந்து கிடந்தது இரவு யாரேனும் தேடி வருவார்கள் என கடையில் வைத்திருந்து யாரும் வராததால் பணம் குறித்து தகவல் தெரிவித்து பணத்தை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பணத்தைப் பெற்று சண்முகராஜா வசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இந்நிகழ்வை பாராட்டும் வகையில் திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி பணத்தை நேர்மையாக ஒப்படைத்த முதியவர் பீர்முகமதுவை பாராட்டி சால்வை அணிவித்து நன்றி கூறினார் உடன் சார்பு ஆய்வாளர் பிரிட்டோ சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கண்ணன் பெண் தலைமை காவலர் வடிவு ஆகியோர் இருந்தனர்..
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி