திருநெல்வேலி: சாலையில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள்.
நெல்லை மாநகரம் மகாராஜநகர் பகுதியில் 26-02-2022 ம் தேதியன்று காலை மேல புத்தனேரியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி பொன்னம்மாள் என்பவர் வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளியான இவர் சாலையில் நடந்து சென்றபோது, சாலையில் கீழே கிடந்த பையில் பணம் ரூ 26,830/- யை எடுத்து TVMCH காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் சாலையில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் ஒப்படைத்த பொன்னம்மாள் மற்றும் அவரது கணவர் கண்ணன் அவர்களை 27-02-2022 ம் தேதியன்று, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் பாராட்டி சால்வை போர்த்திகௌரவித்தார்கள்.
குறிப்பு : பணப்பையை தவறவிட்ட நபர்கள் சரியான அடையாளங்களை தெரிவித்து, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தை அணுகி பெற்றுக்கொள்ளவும்.