தூத்துக்குடி : நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அப்பகுதியிலுள்ள உள்ள நீர் நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில், கரைக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து (03.09.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் திருச்செந்தூர் பரமன்குறிச்சி சந்திப்பு, உடன்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சிலைகளின் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருச்செந்தூர் கடலில் பொதுமக்கள் நீராடும் போது நீண்ட தூரம் உள்ளே சென்று நீராடுவதால் ஆபத்து ஏற்படும் என்று ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் இ.கா.ப அவர்கள் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.