கோவை : நாகராஜபுரம், கார்டன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், கண்ணன். இவர், கோவை மாவட்ட போலீசின் டுவிட்டர் பக்கத்தில், தான் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பதாகவும், கார்டன் சிட்டியில் உள்ள குடியிருப்பில், தனது வயதான தாய், உடல் நலக்குறைவுள்ள தந்தை மற்றும் தனது தங்கையின் குழந்தைகள் ஆகியோர் இருப்பதாகவும், அவர்கள் உணவு இல்லாமல் உள்ளதால், உதவி செய்ய வேண்டுமெனவும், கேட்டு பதிவிட்டு இருந்தார்.இதனையடுத்து, வடவள்ளி போலீசார் சார்பில், தனிப்பிரிவு தலைமை காவலர் குமரவேல், தலைமை காவலர் குமார் ஆகியோர், கண்ணனின் குடும்பத்தாருக்கு, ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி வழங்கினர். டுவிட்டர் பதிவில் உதவி கேட்டவுடன், உதவிய கோவை மாவட்ட போலீசாருக்கு, கண்ணன் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.