திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறையும் மற்றும் போக்குவரத்துதுறையும், இணைந்து (19.09.2022), மாலை திருவண்ணாமலை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடிய 18 ஆட்டோக்களை திருவண்ணாமலை நகர காவல் துணை கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சிறார்கள் ஓட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி, பெற்றோர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர். பின்னர் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேருந்தின் படிகளில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கிவிட்டு படிக்கட்டில் பயணம் செய்வதால் எழும் ஆபத்தை விளக்கி அவர்களை உரியவாறு மாற்று பேருந்திகளில் பயணம் செய்வதை உறுதி செய்தார்.