கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன்.இ.கா.ப., அவர்கள் B1,பஜார் மற்றும் B4 உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான உக்கடம் சந்திப்பு ,லாரிப்பேட்டை , பழைய மார்க்கெட் , மீன் மார்க்கெட் மற்றும் புல்லுகாடு ஆகிய பகுதிகளில் Foot patrol சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிந்து செல்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் கபாடி விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் கலந்துரையாடி உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டின் அவசியம் குறித்து
அறிவுரை வழங்கினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்