வேலூர் : வேலூர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரியில் கரைப்பது வழக்கம். அதன்படி அங்கு சிலைகளை கரைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் திரு.குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், தீயணைப்பு நிலையை அலுவலர் லோகநாதன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்ரு செய்தனர். அப்போது நெல்லூர் பேட்டை ஏரியில், விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியில் பஒக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்வது சிலைகள் கரைக்கும் பகுதியில் ஆழப்படுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சிலைகள் கரைக்கும் இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.