கடலூர்: கொரோனோ வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தமிழக அரசு சமூக இடைவெளி விட்டு கடைகளில் பொருட்கள் வாங்கசொல்லி எவ்வளவு வலியுருத்தியும் மக்கள் கடைபிடிக்க முடியாதசூழ்நிலையே உள்ளது. அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் என சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் இன்று 28.04.2020 செவ்வாய் கிழமை காலை முதல் கடைகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக முகத்தில் மாஸ்க் அணிந்தும் குடை எடுத்துவந்து குடைபிடித்து நின்று பொருட்களை வாங்குவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். அதனால் கொரோனோ நோய்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மாஸ்க் மற்றும் குடை இல்லாமல் வரும் மக்களுக்கு எந்த பொருட்களையும் தரவேண்டாம் என்று வணிகர்களை நெல்லிக்குப்பம் பகுதி மக்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்