சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டம் தேவகோட்டை தாலுக் சரக திருவேகம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவகோட்டை அருகே நெடோடை கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதி இன்றி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இது குறித்து நெடோடை குரூப் கிராம நிர்வாக அலுவலர் மரியாதைக்குரிய செல்வகுமார் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நாகராஜன், ரமேஷ், குமார், சண்முகம்,செல்லமுத்து, ஆறுமுகம் உள்ள உள்ள பட ஏழு பேர் மீது திருவேகம்புத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மோகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி