நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் பராமரிப்பு நிலை குறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள்ஆய்வு நடத்தினர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஐந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதில், உள்ள உதிரிபாகங்கள், பணியில் உள்ள போலீசாருக்கான சீருடைகள், இரவு நேரங்களில் பணிக்கு தேவைப்படும் டார்ச் லைட்டுகள்,கொரோனா பரவலை அடுத்து, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களை கண்டுபிடிக்க, ஊதச்செய்து சோதிக்கும் போது பயன்படுத்தும் உறிஞ்சி குழலை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டுதல் இது போன்ற காலத்தில் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றுதல் மேலும் வாகனங்களில் உள்ள கேஸ்களின் இருப்பு நிலைகள் குறித்து ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, வீணாகிய பொருட்களை மாற்றுவது தொடர்பாக அந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் எழுதித் தரும்படி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.