திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் மேலூர் வரை உள்ள சாலையில் ஜல்லி மண் கொட்டி கனரக வாகனங்களால் இந்த சாலையே புழுதி மண்டலமாக இருக்கிறது. இந்த சாலையை ஒட்டி பள்ளிக்கூடங்களில் ஆயிரக்கனக்கான மாணவச்செல்வங்களும் நூற்றுக்கனக்கான கடைகளில் வணிகர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.பல முறை சீர் செய்ய பலர் மனுக்கள் கொடுத்தும் துரித நடவடிக்கை இல்லை. இதே நிலை இன்னும் சில நாட்கள் இருந்தால் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் கண்டன ஆர்பாட்டம் நடத்தப் போவதாக பொன்னேரி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி அபூபக்கர் மற்றும் மீஞ்சூர் விடுதலை சிறுத்தை கட்சியின் சிறுபான்மையின் நிர்வாகி பாபு என்ற அஜிஸ் தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு