திருச்சி: திருச்சி மாவட்டம், 02.02.2022 இன்று ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நவலூர் என்ற கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல புத்தகங்களுடன் அடங்கிய நூலகத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .சுஜித் குமார் இ.கா.ப அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நூலகத்திற்கு காவல்துறையினரால் சுமார் 120 புத்தகங்கள் அம்மையத்தின் அமைப்பாளர் திருமதி. சாந்தி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்நூலகத்திணை செயல்படுத்துமாறும் மற்றும் கிராமத்தினருக்கும் புத்தக வாசிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் இந்நூலகத்தில் குழந்தைகள் படிப்பதற்கான புத்தகம், இளைஞர்களுக்கான IAS,IPS TNPSC, காவல்துறை போன்ற அரசு பொது தேர்வுகளுக்கு படிக்க தேவையான புத்தகங்கள் உள்ளன. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற திருச்சி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்