திருமங்கலம் உட்பட பல இடங்களில் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்து கார், டூவீலர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்குளம் ஜெயலட்சுமி (40 )அரசு ஒப்பந்தக்காரர். ஜூலை 23ல் உதவியாளருடன் டூவீலரில் திருமங்கலம்- செக்கானூரணி ரோட்டில் கீழ் உரப்பனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது டூவிலர் வந்த இருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த நகைக்களை பறித்து தப்பிச் சென்றனர்.
ஜெயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வசந்தகுமார், அவர்கள் காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி லதா, சார்பு-ஆய்வாளர் திரு. மாரிக்கண்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை செய்து திருச்செங்கோடு ராணி(40) யமுனா (27) சேலம் பிரபு(34) முகமது அப்துல்லா (24 ) கேசவன் (40) நாமக்கல் தமிழ் செல்வன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி