திண்டுக்கலில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காலை 10 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் ஊர்சுற்றிய இளைஞர்களை போலீசார் ஆங்காங்கு பிடித்தனர்.
இந்நிலையில்திண்டுக்கல் வாணிவிலாஸ் அருகே மேற்கு காவல் சார்பு ஆய்வாளர் சவடமுத்து மற்றும் காவலர் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களிடம் விசாரணை செய்து அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை பிடித்தனர்.
அவர்களிடம் ஒரு நாள் கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்று அங்கு சேவை செய்ய வைப்பதாக போலீசார் கூறினர். இதைக் கேட்ட பிடிபட்ட இளைஞர்கள் மிரண்டு போனார்கள். இனி நாங்கள் ஊர் சுற்ற மாட்டோம் என அனைவரும் கோரசாக கத்தினர்.
இதையடுத்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் உற்றார் அனைவரிடமும் சமூக இடைவெளி ,முக கவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும். தேவையில்லாமல் ஊர் சுற்றுவதை தடுக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இதை முதல் வேலையாக செய்வோம் என இளைஞர்கள் உறுதி கூறினர். இதையடுத்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா