வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த நசுருதின் ஆன்லைன் மூலம் கொரோனா கால நிவாரணம் தருவதாக SMS ஒன்றை அனுப்பி நூதனமான முறையில் பணத்தை சைபர் திருடர்கள் அபகரித்து கொண்டனர். இது சம்பந்தமாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் காவல் துறையினர், அவர் இழந்த 41500/- பணத்தை மீட்டு, அதனை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன், அவர்கள் மூலம் உரியவரிடம் வழங்கினர். மேலும் இத்தகைய தொலைபேசி அழைப்புகள் / குறுஞ்செய்திகள் SMS மூலமாக பரப்பபடும் பொய்யான தகவல்களை, நம்பி மக்கள் தங்கள் பணத்தை இழக்க வேண்டாம். எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்