கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கோவிந்தன் என்பவர் (18.10.2022), ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு ஓசூர் பழைய பெங்களூர் ரோட்டில் உள்ள கௌரி சங்கர் ஹோட்டல் அருகே இருக்கும் SBI ATM-ல் பணம் ₹40,000/-ரூபாயை எடுத்துக் கொண்டு தன் கைப்பையில் இருசக்கர வாகனத்தில் முன்னாள் வைத்திருந்த போது தனக்கு பின்னால் வந்த நபர் கீழே ₹100 -/ ரூபாய் கிடப்பதாக கூறவே தான் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி கீழே கிடந்த ரூபாயை எடுத்துக்கொண்டு வண்டி அருகே வந்தபோது தான் பையில் வைத்திருந்த ₹40,000/- பணத்தை திருடி சென்று விட்டதாக ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் பணம் திருடிச் சென்ற நபரை (09.12.2022 ), ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்