சென்னை: சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, பெரியார் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது,
அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) ஹரீஷ் 25, அண்ணாசாலை, சென்னை மற்றும் 2) வைபவ் 19, சூளைமேடு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேற்படி குற்றவாளிகளிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.