நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என். எஸ். நிஷா, அவர்கள் இன்று BETA என்ற பெயரில் புதிய “Dedicated Beat” சேவையை தொடங்கி வைத்தார். இந்த புதிய முயற்சியின் மூலம், குறிப்பிட்ட பகுதிகளில் காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேலும் வலுப்படுத்தப்படும். பொதுமக்களுக்கு உடனடி உதவி வழங்குதல், குற்றங்களைத் தடுப்பது மற்றும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். தொடக்க நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, புதிய Dedicated Beat வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்–மக்கள் நல்லுறவு மேம்பட இந்த திட்டம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டது.













