நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசி மோகன், IPS அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி அவர்கள் உத்தரவின் பேரில், உதவி ஊரக துணை கண்காணிப்பாளர் திரு.திருமணி அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்கள் சீட்டாட்டம் விளையாடுபவர்கள் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இன்று 11.05.2020 ஊரக காவல் ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ் குமார், தலைமை காவலர் திரு. சுரேஷ், காவலர் அக்பர் அலி, தனிப் படை தலைமைக் காவலர் திரு.தர்மராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஊட்டி தேவர்சோலை எஸ்டேட் மணி என்பது வீட்டின் அருகில் உள்ள வாழை கொல்லையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சாராயம் தயார் செய்ய பயன்படுத்திய விச நெடி உடைய ஊறல் 23 லிட்டர் கைப்பற்றியும் மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்