காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டியாம்பந்தல் கிராமம், உத்திரமேரூர் ஏரியிலிருந்து மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் சென்னையைச் சேர்ந்த சந்தோஷ் 19 மற்றும் அவரது நண்பர்கள் நேற்று 09.11.21. சுமார் 13.00 மணியளவில் குளித்துக்கொண்டிருந்தபோது,
சந்தோஷ் என்பவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார்.
தகவலறிந்த உத்திரமேரூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடம் விரைந்து காணாமல்போன சந்தோஷை இரவு முழுவதும் தேடிவந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று 10.11.21 காலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உதவியுடன் தேடிவந்தபோது சுமார் 10.30 மணியளவில் சந்தோஷின் உடல் கட்டியாம்பந்தல் தரைப்பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
காவல் துறையினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு சந்தோஷின் உடலை மீட்டெடுத்துள்ளனர்.