திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில், திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவல் பணியில் ஈடுபடும் காவல் ஆளினர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் (10.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு.G.சரத்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற அலுவலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்து, நீதிமன்ற அலுவலில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்து காவலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்கள்.
நீதிமன்ற அலுவலில் சிறப்பாக ஈடுப்பட காவல் ஆளினர்களுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். கலந்தாய்வு கூட்டத்தில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல் புரியும் காவலர்கள் கலந்து கொண்டார்கள்