திருவாரூர் : காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (08.08.2025) நடைபெற்றது. இக்கூட்டதில் காவல்துறை மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது குறித்தும் நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்துவது குறித்தும், பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக நீதிபெற்று தருவது குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள், பிடிகட்டளைகள் குறித்தும், E-Filling செயல்பாட்டின் இடர்பாடுகள் குறித்தும் நிலையம் வாரியாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டம் மாவட்ட அமர்வு நீதிமன்ற முதன்மை நீதிபதி திருமதி P.செல்வமுத்துக்குமாரி அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமயில் நடைபெற்றது, உடன் மகிளா நீதிமன்ற நீதிபதி திரு. ழு. சரத்ராஜ் அவர்கள், குடிமையியல் உரிமைகள் பாதுகாப்பு சட்ட நீதிபதி திரு.ஆ.வடிவேல் B.Com. B.L., தலைமை நீதித்துறை நடுவர் திருமதி. Dr.R.லதா M.A., M.ட., Ph.D., உள்ளிட்ட அனைத்து நீதித்துறை நடுவர்களும், நீதிமன்ற பணியாளர்களும், அனைத்து உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்களும், அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.