திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் தலைமையில் ஆன்லைன் மூலம் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்திற்கு அனுப்புதல் தொடர்பான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் (16.11.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.G.கிருஷ்ணன் B.A., LLB., மற்றும் திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.S. விஜய்ஆனந்த் B.E., B.L., ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருள்செல்வன் அவர்கள், அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தற்போதுள்ள புதிய சட்டத்தின் படி வழக்கு பதிவு, சாட்சிகளின் விசாரணை, வழக்கு தொடர்பான சான்றாவணங்களை ஆன்லைன் மூலம் அனுப்புதல் குறித்தும் அதனால் ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் சரி செய்வது குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு நீதித்துறை நீதிபதிகள் விளக்கம் அளித்தார்கள். மேலும், நீதித்துறை நீதிபதிகள் இனிவரும் காலங்களில் ஆன்லைன் வழியே அனைத்து பரிமாற்றங்களும் நடைபெறும் என்பதால் அனைவரும் கணினி அறிவு பற்றி தெரிந்திருப்பதும், அவ்வப்போது உபயோகிக்கும் செயலிகளின் விபரங்களை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்கள்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் நீதிமன்ற வழக்குகோப்புகள் மற்றும் கோப்புகள் அனைத்தும் கணினிவழியே நடைமுறைப்படுத்தப்படுவதால் அனைத்து கோப்புகளையும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் BACK UP எடுத்து வைப்பது மிகவும் அவசியம் என்று கூறினார்கள்.