இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், உணவுப் பொட்டலங்களும் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று 04.06.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் 150 ஏழைக் குடும்பத்தினருக்கு பாம்பன் வியாபாரிகள் வர்த்தக சங்கத்தினரின் பொருளுதவியுடன் அரிசி மற்றும் காய்கறிகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் மற்றும் இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சிவாஜ், இ.கா.ப., ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியை காவல் ஆய்வாளர் திருமதி.ஜாக்குலின், சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.பரமகுருநாதன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு.பிரபுத்துரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.