இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று (12.06.2021) கமுதி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வீரமாச்சான்பட்டி கிராமத்தில் ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை பெருநாழி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள் வழங்கினார்கள்.