விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் சங்கரி. இவர் தனது கணவருடன் இணைந்து மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தம்பதியர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
சிவகாசி பகுதியில் வேலை வாய்ப்பை இழந்து தவிப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆய்வு பணிகளை செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் என 200 பேருக்கு அத்தியாவசிய, நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். சிவகாசி அருகேயுள்ள மாரனேரி காவல்நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், பயணாளிகளுக்கு அரசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
சமூக ஆர்வலர் சங்கரி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.