திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அரசின் நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடைக்கு தினம்தோரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நியாய விலை கடைக்கு வரும் முதியோர் மற்றும் பெண்கள் வெயிலில் வெகுநேரம் நிற்கும் சூழல் இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தாங்கள் மிகுந்த சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். வெயிலிலும் மழையிலும் நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்கள் நின்று பொருட்கள் வாங்க நிரந்தரமாக ஷீட்டுகள் கொண்டு நிழல் பந்தல் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு