சேலம் : சேலம் ஊரக உட்கோட்டம் மல்லூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த ராணி என்பவர் இருசாயி அம்மன் கோவில் தெரு நிலவாரப்பட்டி பகுதியில் குடியிருந்து வருவதாகவும் (7/6/2019) ஆம் தேதி குற்றவாளியான கணவர் சுருட்டையன் என்ற முருகன் (43) என்பவர் ராணி வீட்டில் இல்லாத போது தனது மகளை குடிபோதையில் தனது மகள் என்றும் பாராமல் வீட்டில் தனியாக இருந்த குழந்தை இடம் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (24/8/2019) ஆம் தேதி போக்சோ ஆக்டிங் படி அப்போதைய கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சசிகலா அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வந்த நிலையில் (26/04/2023) ஆம் தேதி சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி சுருட்டையன் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்கள் ஆயுள் தண்டனையை மற்றும் 15000 அபராதமும் விதித்து திருப்ப வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரும் உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திருமதி.உஷாராணி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்